For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுண்டவுன் ஆரம்பமாகிவிட்டது...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

11:58 AM Apr 12, 2024 IST | Jeni
“பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுண்டவுன் ஆரம்பமாகிவிட்டது   ”   முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

லோக்நிதி ஆய்வு அமைப்பு வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளை குறிப்பிட்டு பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுண்டவுன் ஆரம்பம் ஆகிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

பிரபல லோக்நிதி ஆய்வு அமைப்பு,  2024 மக்களவைத் தேர்தல் களத்தின் முக்கியப் பிரச்னைகள் எவை என்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. வேலைவாய்ப்பின்மை,  பணவீக்கம் உள்ளிட்டவை நாட்டின் முக்கிய பிரச்னைகளாக இருப்பதாக அந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன.  இதுகுறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் லோக்நிதி அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :

“புகழ் பெற்ற லோக்நிதி ஆய்வு அமைப்பு,  2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.  அதில், 27% பேர் வேலைவாய்ப்பின்மை தான் முக்கியப் பிரச்சினை என்றும்,  23% பேர் விலைவாசி உயர்வு என்றும்,  55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும்,  ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும் கூறியுள்ளனர்.

இதையும் படியுங்கள் : கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா!

இதில் இருந்தே இந்த பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுண்டவுன் ஆரம்பம் ஆகிவிட்டது. அதிகரித்துவிட்ட ஊழல்,  கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்,  பத்தாண்டு கால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.  'சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது!”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement