For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெல்லியில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது!

04:11 PM Jun 01, 2024 IST | Web Editor
டெல்லியில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது
Advertisement

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில்  இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது!

Advertisement

நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன.  இதில் மொத்தம் 485 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.  இந்நிலையில் இன்று 7-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  இதனுடன் 18வது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைகிறது. இதனையடுத்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

 மக்களவை தேர்தல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில்,  இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 1 ஆம் தேதியான இன்று நடைபெறும் என முன்பே அறிவிக்கப்பட்டது.  இதனையொட்டி கூட்டணியில் உள்ள 28 கட்சிகளுக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என தகவல் வெளியானது.  இன்றுடன் (ஜூன் 1) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் நிறைவடைய உள்ள நிலையில் இக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.  இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக திமுக பொருளாளார் டி.ஆர்.பாலு கலந்து கொண்டார்.

இந்த நிலையில் இன்று பிற்பகலுக்கு பின் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இடதுசாரி தலைவர்களான சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொண்டனர்.  கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tags :
Advertisement