For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஜெய்பீம் பார்த்து வருத்தப்பட்ட முதலமைச்சர் நிஜ வாழக்கையில் வருத்தப்படமாட்டார்" - ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

ஜெய் பீம் திரைப்படம் பார்த்து தான் முதலமைச்சர் வருத்தப்படுவார், நிஜ வாழ்க்கையில் வருத்தப்பட மாட்டார் என்று ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.
03:02 PM Jul 13, 2025 IST | Web Editor
ஜெய் பீம் திரைப்படம் பார்த்து தான் முதலமைச்சர் வருத்தப்படுவார், நிஜ வாழ்க்கையில் வருத்தப்பட மாட்டார் என்று ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.
 ஜெய்பீம் பார்த்து வருத்தப்பட்ட முதலமைச்சர் நிஜ வாழக்கையில் வருத்தப்படமாட்டார்    ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
Advertisement

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அஜித்குமார் மரணத்தை கண்டித்து தவெக தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

அப்போது அக்கட்சியின் தலைவர் விஜய் கருப்பு நிற உடை அணிந்து, பதாகையை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார். இதில் பொதுச் செயலாளர் ஆனந்த், பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மற்றும் ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது “சாரி வேண்டாம்… நீதி வேண்டும்” என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்ந்து தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், "இந்த கூட்டம் முதலமைச்சரை எதிர்த்து நடைபெறும் ஆர்பாட்டம் கிடையாது. ஜெயராஜ் பினிக்ஸ் வழக்கினை அன்றைய காலகட்டத்தில் சிபிஐக்கு மாற்றப்படும் என அறிவிப்பு வந்தபோது தமிழக எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அன்றைக்கு சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டால் தமிழக காவல்துறை இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பி, அன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆன்மீக அடிப்படையில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என குரல் எழுப்பினார்.

ஸ்டாலினுடைய போராட்ட குணமானது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பொழுது மக்களுக்காக குரல் கொடுக்கிறார். இப்பொழுது முதலமைச்சராக இருக்கும்பொழுது மக்களினுடைய உரிமைகளுக்காக ஏன் குரல் எழுப்ப மறுக்கிறீர்கள். அஜித் குமார் மரணம் தொடர்பாக முதலில் படிப்பினை என்று கூறினீர்கள்.

தவெக தலைவர் விஜய் அஜித் குமாரின் அம்மாவை பார்த்த பிறகு சிபிஐ விசாரணை என்று கூறினீர்கள். அஜித் குமார் அம்மாவிடம் Sorry னு சொன்னிங்க, தேர்தல் நாடகம் அப்போது தான் தெரிந்தது. அதாவது மதுரை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தின் தலையிட்டு உண்மையைக் கொண்டு வந்ததற்கு பிறகாக சாரி என தெரிவித்திருக்கிறீர்கள்.

இதுவரை காவல் மரணங்கள் 24 வரை நடைப்பெற்றது என நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. இது தொடர்பாக 31 பேரை சந்திக்க தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அவர்களை நேற்று சந்தித்திருந்தோம் அவரது கண்களில் ரத்தமானது கசிந்திருந்ததை நான் பார்த்தேன்.

லாக் அப் மரணங்கள் மீது போலியான கதைகளை உருவாக்கி கஞ்சா விற்றவர், சாராயம் விற்றவர் என போலியான கதைகளை உருவாக்கி மரணம் அடைந்தோரின் குழந்தைகள் அவப்பெயரினை சுமக்கும் வகையில் அநீதியானது அவர்களுக்கு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. நங்கள் இதை சாதரணமாக விட மாட்டோம். தாய்மார்களே நியாயம் கிடைக்கவில்லை என்றால் தலைவர் விஜய் தலைமையில் தமிழகம் முழுக்க தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement