“ஒரே நாடு ஒரே வரி என்று சொன்ன மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை மட்டும் நான்காக பிரித்து வசூல் செய்கிறது!” - விக்கிரமராஜா குற்றச்சாட்டு
ஒரே நாடு ஒரே வரி என்று சொன்ன மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை மட்டும் நான்காக பிரித்து வசூல் செய்கிறது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை வலையங்குளம் பகுதியில் வணிகர்கள் விடுதலை முழக்க மாநாடு நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா மற்றும் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து வணிக சங்க மாநாட்டில் விக்கிரமராஜா பேசியதாவது:
நாங்கள் எல்லாம் வாக்காளர்கள் அதை மனதில் வைத்து எங்களை பாதுகாக்கும்
நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என அமைச்சர்கள் மூர்த்தி , அனிதா
ராதாகிருஷ்ணன் முன்னிலையில் வேண்டுகோள் விடுத்தார்,மத்திய அரசு கார்ப்பரேட்
நிறுவனத்தையும் ஆன்லைன் வர்த்தகத்தையும் வாழ வைக்கும் விதமாக நடந்துகொள்கிறது. வரக்கூடிய மத்திய அரசு வணிகர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் டெல்லியை நோக்கி படையெடுத்து போராட்டம் நடத்துவோம்.
கடைகளில் நுழைந்து பிரியாணி சாப்பிட்டுவிட்டு கடை உரிமையாளர்களை தாக்கும்
சம்பவம் நடைபெறுகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும்
நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். சம்பளம் இல்லாத அரசு ஊழியர்களாக வணிகர்கள் பணி புரிந்து அரசுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் செய்து தருகிறோம்.
ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பல்வேறு வரிகட்டினாலும் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட
வணிகர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் மத்திய அரசு பாராமுகமாக உள்ளது. சில அதிகாரிகள் லைசென்ஸ் பெறுவதற்கு லஞ்சம் கேட்சிறார்கள். அதிலிருந்து தங்களை
காக்க அமைச்சர்கள் உதவ வேண்டும் என்றார்.