Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது" - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!

12:16 PM Feb 26, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளது. 

Advertisement

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது:

"பாஜக ஆட்சி வந்ததில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது.  பல ஆண்டுகளாக மீன்பிடித் தொழில் செய்து வந்த மீனவர்களால் அந்த தொழிலை சரியாக செய்ய முடியவில்லை.  அண்டை நாடுகள் தமிழ்நாட்டு மீனவர்களை குறி வைத்து தாக்குகின்றன.  குறிப்பாக இலங்கை அரசாங்கம் படகை பிடிப்பது, வலையை கிழிப்பது அவர்களை கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.

இலங்கை கடற்படை இலங்கை மீனவர்களை அழைத்து வந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.  10 ஆண்டுகளாக பிரதமர் மோடி அரசு என்ன செய்து வருகிறது.  இந்திய வெளியுறவுத்துறை முழுவதும் தோல்வி அடைந்துள்ளது.  பாஜக அரசு மீனவர்களை முற்றிலும் கைவிட்டு விட்டது. இதனை காங்கிரஸ் கண்டிக்கிறது.

மிகப்பெரிய கடலில் இறங்கி பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்ப உள்ளோம்.  பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும் அன்று கருப்பு கொடி போராட்டம் நடத்த உள்ளோம்.  2014 முதல் 2024 ஆம் ஆண்டு வரை 600 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.  ஏற்கனவே பாஜக அரசு ஜாயிண்ட் ஒர்க்கிங் கமிட்டி அமைப்பதாக சொன்னார்கள், ஏன் இன்னும் அதை செய்யவில்லை.

பாஜக அரசுக்கு மீனவர்கள் மீது அக்கறை இல்லை, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.  இன்று பிற்பகல் 12:15 மணியளவில் புதுடெல்லிக்கு செல்ல உள்ளேன்.  நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பேச்சுவார்த்தை சமூகமாக நடந்து வருகிறது.  எங்கள் தலைவர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.

மிக விரைவில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்க்கே தமிழ்நாடு வருவார்.  மீண்டும் விவசாய பெருமக்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.  பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறைப்போம் என்றார்கள்.  2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக சொன்னார்கள். 15 லட்ச ரூபாய் கொடுப்பதாக சொன்னார்கள், கொடுத்தார்களா?  திமுகவுடன் நல்ல நட்புடன் உள்ளோம்.   மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் காங்கிரசுடன் இருப்பார்கள். "

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
BJPCongressElection2024INCselvaperunthagai
Advertisement
Next Article