For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”பாஜக கூட்டணி தான் சிதறி உள்ளது”- செல்வப் பெருந்தகை விமர்சனம்!

இந்தியாக் கூட்டணியில் சிதறல் இல்லை என்றும் பாஜக கூட்டணி தான் சிதறி உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை விமர்சித்துள்ளார்.
07:12 PM Sep 01, 2025 IST | Web Editor
இந்தியாக் கூட்டணியில் சிதறல் இல்லை என்றும் பாஜக கூட்டணி தான் சிதறி உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை விமர்சித்துள்ளார்.
”பாஜக கூட்டணி தான் சிதறி உள்ளது”   செல்வப் பெருந்தகை  விமர்சனம்
Advertisement

திருநெல்வேலியில் செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெற உள்ள “வாக்கு திருட்டு” மாநாடு தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மதுரையில் உள்ள தமிழ்நாடு விடுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து, செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisement

அப்போது பேசிய அவர்,

”இந்தியாக் கூட்டணியில் பிரச்சனை இல்லை. எங்கள் கூட்டணி பலமாக வலிமையாக உள்ளது. இந்தியா டுடே கருத்துக்கணிப்பு படி இந்தியாக் கூட்டணி 175 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்கள் கூட்டணி கருத்துக்கணிப்பை தாண்டி 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். எங்கள் கூட்டணியில் சிதறல் இல்லை. பாஜக கூட்டணி தான் சிதறி உள்ளது. கடந்தமுறை பாஜக கூட்டணியில் இருந்த ஓ.பி.எஸ், தே.மு.தி.க, பா.ம.க தற்போது யாருடன் உள்ளார்கள். எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. ராகுலுக்கு எதிராக யாராலும் விமர்சனம் செய்ய முடியாது. காங்கிரஸ் இல்லாத கிராமம் இல்லை என்ற வலுவோடு இத்தேர்தலை தமிழக காங்கிரஸ் சந்திக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள மாநில கட்சிகள் வாய்க்கு வந்த தொகுதிகளை கேட்கலாம். ஆனால் காங்கிரஸ் தேசிய கட்சி தொகுதிகள் கேட்பது குறித்து அகில இந்திய தலைமை வழிகாட்டும். விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்ற கருத்தில் எனக்கு ஐடியா இல்லை”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement