Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”அதிமுக-வை பணிய வைத்து கூட்டணி அறிவிப்பு நடந்துள்ளது” - திருமாவளவன் எம்.பி. பேட்டி!

”அதிமுக-வை பணிய வைத்து கூட்டணி அறிவிப்பு நடந்துள்ளது என திருமாவளவன் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.
02:56 PM Apr 12, 2025 IST | Web Editor
Advertisement

கோவை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Advertisement

அப்போது அவர்  பேசியதாவது, “மத்திய அரசு நவீன பாசிசத்தை கையில் எடுத்து உள்ளது. வக்ஃப் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் ஆளுநரின் செயல் இருந்தது. இதில் உச்ச நீதிமன்றம் வரலாறு தீர்ப்பை வழங்கி உள்ளது. ஆளுநர் தீர்ப்பை ஏற்று தானேக பதவி விலகி இருக்க வேண்டும்.

அதிமுக-வை பணிய வைத்து  கூட்டணி அறிவிப்பு இங்கு நடந்து உள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு என்பது! யார் தலைமையில் கூட்டணி என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. கூட்டணியை அறிவித்தது பாஜக தான். ஆனால் இதில் அதிமுக ரோல் என்ன?.

கூட்டணியை அதிமுக தொண்டர்கள் ஏற்க வழியில்லை. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அமித்சாவை தனியாக சந்திக்கும் நிலைகள் உண்டாக்கியது. பாஜக உள்ள கூட்டணியில் சிறுபான்மையினர் வாக்குகள் என்பது இந்திய அளவில் கிடைக்காது. வக்ஃப் சட்டத்திற்கு எதிராக வாக்கு அளித்த அதிமுக கூட்டணியில் இணைந்து உள்ளது என்பது எவ்வளவு நெருக்கடியை சந்தித்து உள்ளது என்பது தெரிய வருகிறது”

இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Tags :
ADMKBJPEPSndathirumavalavanVCK
Advertisement
Next Article