அஜித்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட ’பராசக்தி’ பட நடிகை...!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ’குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குறார். ஏகே - 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பானது அஜித்தின் கார் பந்தயங்கள் முடிவடைந்ததும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா மட்டுமின்றி கார் பந்தயத்திலும் ஆர்வம் கொண்ட அஜித், அஜித் குமார் சொந்தமாக கார் ரேஸ் அணியை உருவாக்கி போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றுள்ளது. இந்த நிலையில் தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா மலேசியாவில் அஜித் குமாரை சந்தித்து செல்ஃபி எடுத்து கொண்டார்.

சிவாகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள ’பராசக்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுக மாகிறார். ஸ்ரீ லீலா. இப்படம் வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது.
