தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு தயாராகி வருகிறார். இதையொட்டி தனது பிரசார பயணத்தையும் அவர் தொடங்கினார். கரூர் சம்பவத்திற்கு பின் மீண்டும் மக்கள் சந்திப்பை விஜய் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாக உள் அரங்கத்தில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காஞ்சீபுரத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை நீலாங்கரையில்
உள்ள இல்லத்தில் இருந்து விஜய் புறப்பட்டுச் சென்றார்.
இதனையடுத்து காலை 11 மணியளவில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றடைந்தார். இந்த நிலையில் விஜய் பங்கேற்றுள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதற்காக அவர்களுக்கு ‘கியூஆர்’ கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.