For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய நிதியமைச்சருக்கு நன்றி - ப.சிதம்பரம்!

01:14 PM Jul 23, 2024 IST | Web Editor
காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய நிதியமைச்சருக்கு நன்றி   ப சிதம்பரம்
Advertisement

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை படித்து அதன்படி பட்ஜெட்டை அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டியது.

இதற்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த சில வாரங்களாக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து வந்தனர். இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. 2024-25 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அவர் தாக்கல் செய்த 7-வது பட்ஜெட் இதுவாகும்.

பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பொருட்களுக்கான சுங்க வரி குறைப்பு, 9துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டம், மொபைல் மற்றும் சார்ஜர் உள்ளிட்ட உதிரிபாகங்களுக்கான வரி குறைப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்பு வெளியானாலும் வருவாமன வரி உச்ச வரம்பில் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் அளித்துள்ளதாக பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

"தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் வாசித்துள்ளார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பக்கம் 30 சொல்லப்பட்டுள்ள வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக அளிக்கப்படும் ஊக்கத்தொகையை [ Employment-linked incentive (ELI) ]  ஏற்றுக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

அதேபோல காங்கிரஸின் தேர்தல் அறிக்கையின் பக்கம் 11 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் வழங்கப்படும் ஊக்கத் தொகையை அறிமுகப்படுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

மேலும், ஏஞ்சல் வரியை ரத்து செய்யப்படும் என்ற காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியையும் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள மேலும் சில விஷயங்களை பட்ஜெட்டில் சேர்த்திருக்கலாம்.  தவறவிட்ட விஷயங்களை விரைவில் பட்டியலிடுகிறேன்” என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement