For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தாலியை கழற்ற சொல்லியது வரலாறு காணாத அத்துமீறல்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

நீட் தேர்வு மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் வகையில் ஒரு கொடுமையான தேர்வாக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
10:51 AM May 05, 2025 IST | Web Editor
நீட் தேர்வு மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் வகையில் ஒரு கொடுமையான தேர்வாக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 தாலியை கழற்ற சொல்லியது வரலாறு காணாத அத்துமீறல்    அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொளத்தூர் கிழக்கு பகுதி சார்பில் 75 ஆவது நாளாக ரமணா நகர் மற்றும் பெரியார் நகர் அரசு மருத்துவமனை வெளியே உள்ள கார்த்திகேயன் சாலையில் நடைபெற்ற அன்னம் தரும் அமுத கரங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் தறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் காலை உணவு வழங்கினார்கள்.

Advertisement

தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்ந்தார்கள். இறுதியாக அமைச்சர்கள் முதல்வர் படைப்பவத்தை பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி விராசாமி, பகுதி செயலாளர் ஐ.சி.எப் முரளி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "முதல்வர் பிறந்த நாள் விழா சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகளாக கொண்டாடப்பட்டு வருவதாகவும், இரண்டரை மாதங்களுக்கு மேலாக கவியரங்கங்கள் கருத்தரங்கங்கள் பட்டிமன்றம் வாழ்த்து அரங்கம் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு உள்ளது என்றும் 75 நாட்களாக அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு வரை வழங்கப்பட உள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், நீட் தேர்வு வந்த நாள் முதல் குளறுபடிகள் தான், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகியது நீட் தேர்வு மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் வகையில் ஒரு கொடுமையான தேர்வாக உள்ளது என்றும் தாலியை கழட்டி வைத்து விட்டு நீட் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்லியதெல்லாம் வரலாறு காணாத அத்துமிரல் என்றும் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு வழிகளில் நீட் தேர்வால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

தமிழிசை நீட் நீட்டாக நடந்து கொண்டு உள்ளது என்று கூறுகிறார். நீட் தேர்வால் நாற்பதற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதற்கு மத்திய அரசு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. நீட் தேர்வில் இருந்து விளக்கு பெறுவோம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி, தமிழிசை சௌந்தரராஜன் நீட் விளக்கு பெற அரசுக்கு உதவ வேண்டும், அதனை விட்டுவிட்டு அவர்கள் வேறு ஏதேனும் சொல்வது அவர்களின்
கையாலாகாத தனத்தை காட்டுகிறது.

நீட் தேர்வு முடிவுகள் வந்ததும் ஒரு நாள் கூட காலதாமதமின்றி கலந்தாய்வுகள் தொடங்கும். ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் பரிந்துரைப்படி அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டை 7.5 சதவீதத்திலிருந்து பத்து சதவீதம் வரை உயர்த்துவது குறித்து சட்ட விதிகளை ஆய்வு செய்து நடவடிக்கை
எடுக்க முயற்சிக்கப்படும்.

அவசரகதியாக அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஓதுக்கீட்டை உயர்த்தும் பட்சத்தில் சிலர் நீதிமன்றத்தை அணுகி பல்வேறு பிரச்சனைகளை சிக்கல்களை எழுப்பக்கூடும். எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டை 10% வரை உயர்த்துவது குறித்து சட்ட வல்லுனர்களின் ஆலோசனை அவசியமானது. சட்ட வல்லுநர்களின் ஆலோசனையின் அடிப்படையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "அன்னம் தரும் அமுத கரங்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அடுத்த வருடம் வரை பொதுமக்களுக்கு காலை உணவு வழங்க உள்ளோம் நல்ல தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

Tags :
Advertisement