Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பொதுத்தேர்வு எழுதிய மாணவிகளிடம் ஆசிரியர் பாலியல் சீண்டல் - காவல்துறை தீவிர விசாரணை!

திருப்பூரில் 12 ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
04:53 PM Mar 25, 2025 IST | Web Editor
Advertisement

திருப்பூர் வெங்கமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று நடைபெற்றது. அப்போது அம்மாபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் சம்பத்குமார் என்பவர் தேர்வு அறை பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தேர்வு நடந்த போது அறையில் இருந்த 6 மாணவிகளிடம் தேர்வு அறை பார்வையாளர் சம்பத்குமார் சோதனை செய்துள்ளார்.

Advertisement

இதனிடையே தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவிகள் பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்து தேர்வு அறையில், ஆசிரியர் சம்பத்குமார் சோதனை செய்தபோது சில்மிஷத்தில் ஈடுபட்டதாக மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல்துறையினர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து காவல்துறையினர் சம்பத்குமாரை விசாரணை செய்வதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
femaleharassesinvestigatingPolicepublic examsstudentsteacherTirupur
Advertisement
Next Article