தட்கல் டிக்கெட்: ஐஆர்சிடிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ரயில்களில் உடனடியாக பயணம் மேற்கொள்ள டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக தட்கல் முறை கடைபிடிக்கப்படுகிறது. பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக, அதாவது நாளை பயணம் மேற்கொள்ள இன்று டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.
ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்வதற்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கும். படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்ய காலை 11 மணிக்கு முன்பதிவு தொடங்கும். இதில் தட்கல் மற்றும் பிரீமியம் தக்கல் என இரண்டு வசதி உள்ளது. பிரீமியர் தக்கலில் டிக்கெட் பதிவாக வாய்ப்புள்ளது. மேலும், தேவைக்கேற்ப டிக்கெட் விலை ஜெட் வேகத்தில் உயரும். ஆனால் இரண்டுக்குமான பதிவு நேரம் ஒன்றுதான்.
இந்நிலையில் தக்கல் மற்றும் பிரீமியர் தக்கலுக்கு வெவ்வேறு நேரமாக மாற்றப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. ஆனால், தற்போதுள்ள முன்பதிவு நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை என ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது.