Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ரயில்வே துறையின் தேர்தல் மோசடிகள்" - #SuVenkatesan எக்ஸ் தளத்தில் பதிவு!

01:08 PM Aug 19, 2024 IST | Web Editor
Advertisement

ரயில்வே துறையின் தேர்தல் மோசடிகள் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் சமூக வலைதளப் பதிவிட்டுள்ளார்.

Advertisement

2024-25ம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி மக்களவையில் தாக்கல்  செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் வெறும் 1,000 ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

தேர்தலுக்கு முன்பு போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு கோடிக்கணக்கில் ஒதுக்கப்பட்ட நிதி, 2024-25 முழுமையான பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் ரயில்வே பிங்க் புத்தகம் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக  மதுரை எம்.பி சு.வெங்கடேசன் சமூக வலைதளப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : #UniformCivilCode ஐ ஒருபோதும் ஏற்கமாட்டோம் - முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் திட்டவட்டம்!

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :

"ரயில்வே துறையின் தேர்தல் மோசடிகள். புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு கர்நாடகாவை உள்ளடக்கிய தென்மேற்கு ரயில்வேக்கு 1448 கோடி ஒதுக்கிய ரயில்வே துறை தமிழ்நாட்டிற்கு உள்ளடக்கிய தெற்கு ரயில்வேக்கு வெறும் 301 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. ஆனால் தேர்தலுக்கு முன் இடைக்கால பட்ஜெட்டில் கர்நாடகாவின் புதிய வழித்தடங்களுக்கு 2286 கோடி அறிவித்துவிட்டு இப்போது 1448 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. தெற்கு ரயில்வேக்கு 971 கோடு அறிவித்து விட்டு 301 கோடி மட்டுமே தந்துள்ளது"

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags :
BJPcpimrailwaysouthernrailwaySUVenkatesanTamilNadu
Advertisement
Next Article