இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் | எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்கள் கைது!
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், தமிழ்நாடு மீனவர்களை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து விடுவர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறையிலும் அடைக்கப்படுவர். இது தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது.
இதையும் படியுங்கள் : மொரீசியஸ் புதிய பிரதமராக பதவியேற்கும் நவீன் ராம்கூலம்!
இந்நிலையில், பருத்தித்துறை அருகே எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக தமழ்நாடு மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கையின் காங்கேசன் துறை முகாமில் வைத்து இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 23 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 12 பேர் சிறைபிடிக்கப்பட்டு உள்ளது அப்பகுதி மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியில் உள்ளனர்.