"தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்" - #EPS புகழாரம்!
தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா, நேற்று முன்தினம் தேவர் நினைவாலய நிர்வாகத்தின் சார்பில் ஆன்மிக விழா யாகசாலை, லட்சார்ச்சனை பெருவிழாவுடன் தொடங்கியது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
இதையும் படியுங்கள் : WIvsENG | ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
அப்போது அவர் கூறியதாவது :
"தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளைத் தேவர் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படும் என்ற அறிவிக்கப்பட்டது. மேலும், அதனை சிறப்பாக செயல்படுத்திக் காட்டியவர் எம்.ஜி.ஆர் . பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு சிறப்பு செய்தவர் எம்.ஜி.ஆர்.
1980-ம் ஆண்டு சட்டப்பேரவையில் முத்துராமலிங்கத் தேவரின் முழுஉருவ படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைத்தவர் எம்.ஜி.ஆர் . 1994-ம் ஆண்டு சென்னை நந்தனத்தில் முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவ வெண்கலச் சிலையை திறந்து வைத்தார். 1994ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு அதிமுக சார்பில் 13 கிலோ தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.