For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் - அதிமுக வெளிநடப்பு!

01:40 PM Nov 18, 2023 IST | Web Editor
தமிழ்நாடு சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்   அதிமுக வெளிநடப்பு
Advertisement

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் இருந்த 'ஜெயலலிதா' பெயரை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Advertisement

முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள்,  தற்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் என 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 13-ஆம் தேதி திருப்பி அனுப்பினார்.  இதில், பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே,  சில மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,  இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக,  தமிழ்நாடு சட்டப் பேரவை சிறப்பு கூட்டம் இன்று கூட்டப்பட்டது.  இந்த கூட்டத்தில்,  10 மசோதாக்காளை நிறைவேற்றுவதான அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர்,  10 மசோதாக்களை காரணம் எதையும் குறிப்பிடாமல்,  அனுமதி அளிக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்புடையது அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.  அரசியல் சாசன சட்டப்பிரிவு 200-ன்கீழ், மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு,  ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் போது,  அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்  என்று பேசினார்.

இந்நிலையில், முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் பேசினார். அப்போது, ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார்.  ரத்து செய்ததாக குறிப்பிடவில்லை.  வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆராய வேண்டும் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி,  தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் இருந்த ’ஜெயலலிதா’  பெயரை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக கூறினார்.

இதனை அடுத்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தீர்மானம் நிறைவேற்றப்படும் முன்னரே வெளிநடப்பு செய்தனர்.

Tags :
Advertisement