For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆளுநர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர்!

07:46 AM Feb 12, 2024 IST | Web Editor
ஆளுநர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர்
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (பிப். 12) தொடங்க உள்ள நிலையில் இன்றைய கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. சட்டப்பேரவையின் அலுவலக குழு கூடி எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத்துடன் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்துக் தீர்மானத்தின் மீது மூன்று நாட்கள் விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் 19-ம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தொடரில் விவசாயிகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு நல திட்டங்கள், நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கான வட்டியில்லா கடன், ஏழை எளியோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதற்கான ஆணையும் பிறப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

மேலும் TET நியமன தேர்வு ரத்து செய்வது குறித்தும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்குவது குறித்தும் அசராணை வெளியிடவும் வாய்ப்புள்ளது. அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி இன்னும் அறிவிக்கப்படாமலிருக்கும் நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகவும் வாய்ப்புள்ளது.

Tags :
Advertisement