For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராமர் கோயில் குறித்த பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு - தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை!

02:43 PM May 18, 2024 IST | Web Editor
ராமர் கோயில் குறித்த பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு   தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை
Advertisement

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை இடித்து விடுவார்கள் என்ற பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். 

Advertisement

இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

5ம் கட்ட வாக்குப்பதிவு மே 20-ம் தேதியும், 6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதியும், 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுத்தாக்கல் செய்ய மே-14 ஆம் தேதி இறுதி நாள் என்பதால், ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் போட்டியிடுவோர் மே – 14ம் தேதி மனுத்தாக்கல் செய்தனர்.

5 தொகுதிகளில் வருகின்ற மே – 20 ஆம் தேதி 5ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி,  உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாரபங்கியில் பாஜக-வின் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி"காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறது. மறுபுறம், I.N.D.I.A. கூட்டணி குழப்பங்களை உருவாக்கி வருகிறது. ஒவ்வொரு கட்டமாக தேர்தல் முடிவடைய, I.N.D.I.A. கூட்டணி உறுப்பினர்கள் பிரிந்து செல்ல தொடங்கி உள்ளனர்" என கூறினார்.

இதையும் படியுங்கள் : திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அதிகளவில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்!

இந்நிலையில், மகாராஷ்டிராவின் மகா விகாஸ் அகாதி கூட்டணியின் தலைவர்களான சரத் பவார், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :

“மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் குறைந்தபட்சம் 46 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கிறோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை இடித்து விடுவார்கள் என்ற பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தோல்வி பயத்தில் பிரதமர் ராமர் கோயில் குறித்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்"

இவ்வாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

Tags :
Advertisement