For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”மின் வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது”- முதல்வர் பெருமிதம்!

தூத்துக்குடியில் அமைந்துள்ள வின்ஃபாஸ்ட் கார் தொழிற்சாலையி தொடக்க விழாவில் பேசிய முதலைச்சர் முக.ஸ்டாலின் மின் வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
02:48 PM Aug 04, 2025 IST | Web Editor
தூத்துக்குடியில் அமைந்துள்ள வின்ஃபாஸ்ட் கார் தொழிற்சாலையி தொடக்க விழாவில் பேசிய முதலைச்சர் முக.ஸ்டாலின் மின் வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
”மின் வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது”  முதல்வர் பெருமிதம்
Advertisement

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின் வாகன உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். முதற்கட்டமாக ரூ.1,119 கோடியில் 114 ஏக்கர் நிலத்தில் வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.ஆலையை திறந்து வைத்து காரில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலவர் பேசினார். அவர்,

Advertisement

”2024 ம் ஆண்டு உலக மூதலீட்டார் மா நாட்டில் 16 ஆயிரம் கோடி 3500 பேருக்கு வேலைவாய்பு என்ற உறுதியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தம் போட்டப்பட்ட 17 மாதத்தில் தொழிற்சாலை துவக்கபட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மட்டுமல்ல தென் மாவட்டம் முழுவதும் பயன் பெறும். மேலும் இந்த நாள் தென் தமிழகத்தின் பொன்நாள் ஆகும்.

1300 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள வின்பாஸ்ட் தொழிற்சாலையால் ஆண்டுக்கு 50 ஆயிரம் கார் உற்பத்தி செய்யப்படுகின்றன. தூத்துக்குடியில் அமைந்துள்ள இந்த ஆலை தான் வியட்நாமிற்கு வெளியே வின்பாஸ்ட்டின் மிகப்பெரிய ஆலை . இந்த ஆலை மூலம் 200 க்கும் மேற்பட்ட நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் உள்ளூர் மற்றும் அண்டை மாவட்டத்தில் உள்ளவர்கள் 90 சதவீதம் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.

அடுத்ததாக ராணிப் பேட்டையில் டாட்டாவின் மின் வாகன தொழிற்சாலை அமைகிறது. மேலும் தமிழ் நாட்டில் பி.எம். ட்புள்யூ, ஒலா, ஏத்தர்மின் வாகன உற்பத்தி அமைய உள்ளது. மின் வாகன உற்பத்தியிம் 40 சதவீதம் தமிழகத்தில் தான் உற்பத்தியாகின்றன. இதன்மூலம் மின் வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது”

என்று பேசினார்.

Tags :
Advertisement