இந்தியாவின் முன்னனி எல்க்ட்ரானிக்ஸ் எக்ஸ்போர்ட் மையமாக தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாடு முதலைமைச்சர் ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் அமைந்துள்ள புதிய உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினர். இது டெல்டா நிறுவனத்தின் ரூ.450 கோடி திட்ட மதிப்பில் உருவானதாகும்.
மேலும் அவர் புதிய டெல்டா ஸ்மார்ட் உற்பத்தி பிரிவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்துடெல்டா ஸ்மார்ட் உற்பத்தி பிரிவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.டெல்டா தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர்,
”எலக்ட்ரானிக்ஸ் துறையில் டெல்டா முன்னனி நிறுவனமாக வளர்ந்துள்ளது. ஓசூர் தொழில் வளர்ச்சியில் டெல்டா பங்களிப்புக்காக நன்றி. இந்தியாவின் முன்னணி எல்க்ட்ரானிக்ஸ் எக்ஸ்போர்ட் மையமாக தமிழ்நாடு உள்ளது. அடுத்தகட்டமாக தமிழகத்தின் மத்திய மற்றும் தென் பகுதிகளில் டெல்டா விரிவாக்க மையத்தை அமைக்க வேண்டும். திராவிட மாடல் அரசு அதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும் என உறுதி செய்கிறேன்”
என்று பேசினார்.