அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை - வழக்கறிஞர் பாலு!
பாமக கட்சியில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் கடந்த சில மாதங்களாக உட்கட்சி போட்டி நிலைவருகிறது. இதனை தொடர்ந்து இருவரும் இரு அணிகளாக செயல்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 17-ந் தேதி ராமதாஸ் தலைமையில் நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. மேலும் அக்குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நோட்டீஸுக்கு பதிலளிப்பதற்கான கெடு நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் அன்புமணி பதிலளிக்கவில்லை. இதனை தொடர்ந்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “ பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் பாமகவினர் யாரும் ராமதாஸுடன் தொடர்பில் இருக்க கூடாது என்றும் எச்சரித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணியிடம் செய்தியாளர்கள் எழுப்பினர். ஆனால் அவர் ”எனக்கு இதைவிட வேறு முக்கிய வேலைகள் இருக்கின்றன, வழக்கறிஞர் பாலு விளக்கம் அளிப்பார் எனத் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாலு, “பாமக கட்சி விதிகளின்படி, நிறுவனருக்கு கட்சியின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அதிகாரம் இல்லை. பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கே அதிகாரம் உள்ளது” எனத் தெரிவித்தார்.