For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னைக்கு மீண்டும் வருகிறது ஃபோர்டு - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்...!

ஃபோர்டு நிறுவனம்  முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
03:18 PM Oct 31, 2025 IST | Web Editor
ஃபோர்டு நிறுவனம்  முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
சென்னைக்கு மீண்டும் வருகிறது ஃபோர்டு   முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனம் ஃபோர்டு. இந்தியாவில் சென்னை மற்றும் குஜராத் ஆகிய இடங்களில்  ஆலைகளை கொண்டிருந்தது. ஆனால் தொடர் நஷ்டம் காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு தனது உற்பத்தியை நிறுத்திவிட்டு வெளியேறியது.  இந்த நிலையில் தற்போது  ஃபோர்டு நிறுவனம்  முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

"ஃபோர்டு நிறுவனம் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இஞ்சின் உற்பத்தி அலகைத் தனது மறைமலை நகர் தொழிற்சாலையில் அமைக்கவுள்ளது. மிக நீண்ட, நம்பிக்கை கொண்ட உறவினைப் புதுப்பிக்கும் வகையில் இந்த ஆற்றல்மிகு மீள்வருகை அமைந்துள்ளது. இந்த முக்கிய முதலீட்டினால் 600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் உதிரி பாகச் சூழலும் வலுவடையும். அடுத்த தலைமுறை இஞ்சின்களை உற்பத்தி செய்ய இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரத்தைத் தேர்வு செய்துள்ள ஃபோர்டின் முடிவானது, தமிழ்நாட்டின் தொழில்துறை வலிமைக்கும் உலக உற்பத்திச் சங்கிலியில் நமது தவிர்க்க முடியாத இடத்துக்கும் மற்றுமொரு சான்றாக உள்ளது! தங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்"

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement