For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் 2024-25 : முக்கிய அம்சங்கள் என்னென்ன?

10:57 AM Feb 20, 2024 IST | Web Editor
தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் 2024 25   முக்கிய அம்சங்கள் என்னென்ன
Advertisement

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் 2024-25ல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில்  சட்டப்பேரவை கூட்டம்  நேற்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது. அப்போது காட்சிக்கு எளியன் என்ற திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை கூறி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் உரையை துவங்கினார்.  

இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதன்பின்னர் வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். கிட்டத்தட்ட 144 பக்கம் நிதி நிலை அறிக்கையினை வாசித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சரியாக 2 மணி நேரம் 8 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். அதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்து வருகை தந்தனர். காலை 10 மணியளவில் உரையை தொடங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”

என்ற திருக்குறளுடன் வேளாண்  பட்ஜெட் உரையை துவங்கினார்.

பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள வேளான் நிதி நிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு..

1. மண்வளத்தைப் பேணிக்காப்பது

  • சமச்சீர் உரமிடல், இரசாயன இடுபொருட்களின் பயன்பாட்டினைக் குறைத்தல்
  • பசுந்தாள் உரம், நுண்ணுயிர்கள், மண்புழு உரம், உயிரி பூச்சிக்கொல்லி பயன்பாட்டினை அதிகரித்தல் போன்றவற்றின்
  • உயிர்ம வேளாண்மையை ஊக்குவித்தல்
  • களர் அமில நிலங்களைச் சீர்ப்படுத்துதல்
  • பயிர்க்கழிவுகளை சிதைக்க பயனுள்ள நுண்ணுயிர்க் கலவையை உருவாக்கிட ஆராய்ச்சி

2. ஊட்டச்சத்துமிக்க விளைபொருட்களை வழங்குவது

  • தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியை உயர்த்துதல் பரப்பு,
  • வீட்டுத் தோட்டத்தில் ஊட்டச்சத்துமிக்க பழச்செடிகள்
  • பாரம்பரிய இரகங்கள்
  • தேனீ முனையம்

3. மூலிகைப்பயிர் சாகுபடியை ஊக்குவித்தல்

4. புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல்

  • உழவர் அங்காடிகள்
  • இணையவழி வர்த்தகம்
  • ஏற்றுமதி பயிற்சிகள்
  • பண்ணை வழி வர்த்தகம்
  • வேளாண் கண்காட்சிகள்
  • புவிசார் குறியீடு பெறுதல்

5. உணவுதானியப்பயிர்களின் தேவைக்கேற்ற உற்பத்தியை எட்ட பரப்பு விரிவாக்கம் மற்றும் தரிசு நிலங்களை சாகுபடிக்கு மாற்றுதல்

6. வேளாண்மை, உற்பத்தித்திறன் அதிகரித்தல் தோட்டக்கலைப்பயிர்களின்

  • தரமான விதை, உயர் விளைச்சல் தரக்கூடிய விதை, ஜிப்சம், துத்தநாக சல்பேட், நுண்ணூட்ட உரக் கலவை, வழங்குதல், உள்ளிட்ட இடுபொருட்கள்
  • பூச்சி, நோய் மேலாண்மை.
  • உயர் தொழில் நுட்பம்
  • உயர் விளைச்சலுக்கான அங்கீகாரம் - விருதுகள்

7. விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தில்லாமல் பயிர்களைக் காத்திடும் நோக்கில் - பயிர்களைக் காத்திட சூரிய சக்தி மின் வேலிகள்

8. அனைவரையும் உள்ளடக்கிய வேளாண் வளர்ச்சியை அடைதல்.

  • சிறு, குறு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கூடுதல் மானியம் (பவர் டில்லர், நுண்ணீர்ப் பாசனம், வேளாண் இயந்திரங்கள் வாங்கிட கூடுதல் மானியம்)
  • ஆதி திராவிடர், முக்கியத்துவம் பழங்குடியினருக்கு
  •  எளியோர்க்கென இயந்திர வாடகை மையங்கள்

9. விவசாயிகள் நலன்

  • நெல், கரும்பிற்கு ஊக்கத்தொகை
  • பயிர்க்காப்பீடு
  •  விவசாயிகளுக்குப் வரம்பினை உயர்த்துதல் பொருளீட்டுக் கடன்
  • மின்னணு மாற்றத்தகு கிடங்கு இரசீது (e- Negotiable Warehouse Receipt)
  • வேளாண் கட்டணத்தொகை மின்சாரத்திற்கான இலவச
  • பயிர்க்கடன் வழங்குதல்
  • ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு பராமரிப்பு, நடைமுறை முதலீட்டுக் கடன்
  • பேரிடர் நிவாரணம்
  •  வறட்சித் தணிப்பிற்கான சிறப்பு உதவித் திட்டம் - ஏழு மாவட்டங்கள்

10. நீர் ஆதாரங்களை வலுப்படுத்துதல்

  • இயற்கை வள மேம்பாட்டுப்பணிகள்
  •  சி", "டி" பிரிவு வாய்க்கால்களைத் தூர்வாருதல்
  •  மழைநீர் கட்டமைப்புகளை மேம்படுத்துதல்

11. நீர் மேலாண்மை

  • நுண்ணீர்ப் பாசனம்
  • நெற்பயிருக்கு மாற்றாக, தேவையுடைய மாற்றுப்பயிர்கள் குறைந்த நீர்த்

12. வேளாண் விரிவாக்கம் வலுப்படுத்துதல்

  • அரசு தோட்டக்கலைப் நடவுச்செடிகள் விற்பனை மையம் பண்ணைகளில்
  • கிராம வேளாண் முன்னேற்றக் குழு
  • "ஒரு கிராமம் ஒரு பயிர் செயல்விளக்கம்
  • வட்டாரம் தோறும் தோட்டக்கலைப் பயிர்களுக்கான செயல் விளக்கம்
  • ஒவ்வொரு தோட்டக்கலை அலுவலகத்திலும் தகவல் மையம்

13. இளைஞர்களை வேளாண் தொழில் முனை வோராக்குதல்

14. வேளாண் தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்துதல்

  • வணிகப் பயிர்களை கிடைக்கச்செய்தல் கரும்பு, பருத்தி, மஞ்சள், முந்திரி, தேங்காய், மரப்பயிர்கள்
  • புத்தாக்க நிறுவனங்களை (Start-up) ஊக்குவித்தல்

15. வேளாண்மை பணிகளை இயந்திரமயமாக்குதல்

  • நவீன வேளாண் இயந்திரங்களை உருவாக்குதல்
  • பயிர்சார்ந்த முழுமையான இயந்திரமயமாக்குதல்
  • இயந்திர வாடகை மையங்கள் அமைத்தல்
  • நவீன வேளாண் இயந்திரங்கள், கருவிகள் செயல்விளக்கம்
  • நடமாடும் உலர்த்திகள்

16. விவசாயிகளுக்கு தொடர் வருமானம் கிடைக்கச் செய்தல்

  • ஒருங்கிணைந்த பண்ணையம்
  • வேளாண் காடுகள்
  • கால்நடை, மீன் வளர்ப்பு

17. வேளாண்மையை பொதுமக்களிடம் எடுத்துச்செல்லுதல்

  • பூங்காக்கள் அமைத்தல்
  • வேளாண் கண்காட்சிகள்

18. விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல்

  • உணவு பதப்படுத்தும் மையங்கள்
  • விளைபொருட்களுக்கு உருவாக்கம் மதிப்புச்சங்கிலி
  • உணவுப்பொருட்கள் தரப்பரிசோதனை
  • பனைப்பொருட்கள் உள்ளிட்ட விளைபொருட்களுக்கு பயிற்சிகள், கருவிகள் வேளாண் மதிப்புக்கூட்டுதல்

19. வேளாண் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்

  • நீரழிவு நோய்க்கு ஏற்ற நெல் இரங்கள் உள்ளிட்ட புதிய இரங்களுக்கான ஆராய்ச்சி
  • காலநிலை ஆராய்ச்சி மாற்றங்களை எதிர்கொள்ள
  • பூச்சி, நோய்த் தாக்குதலை எதிர்கொள்ள ஆராய்ச்சி

Tags :
Advertisement