தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு !
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனிடையே, மீனவர்கள் கைதாகும் சமயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே, பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை செல்ல உள்ள நிலையில் இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மீனவர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று (மார்ச்.13) டெல்லியில் நேரில் சந்தித்தனர்.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் அன்பழகன், ஜேசுராஜ், தமிழக பாஜக பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநிலச் செயலாளர் சதீஷ்குமார், மீனவர் பிரிவு மாநிலத் தலைவர் எம்.சி.முனுசாமி மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் குழுவுடன் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தோம்.
Today, along with President of the Tamil Nadu Meenavar Peravai, Thiru J Anbazhaganar avl, Thiru Jesuraj, @BJP4TamilNadu General Secretary Thiru @KaruppuMBJP, State Secretary Thiru Satish Kumar avl, Fishermen Cell State President Thiru MC Munusamy and the delegation of fishermen… pic.twitter.com/dy2MI7qTrN
— K.Annamalai (@annamalai_k) March 13, 2025
டெல்லியில் உள்ள ஏ.வி.எல். வெளியுறவுதுறை அமைச்சர், தூதுக்குழுவின் குறைகளைக் கேட்டு, பிரதமர் மோடியின் அனைத்து ஆதரவையும் அவர்களுக்கு உறுதியளித்தார். ஏ.வி.எல் தலைமையிலான மத்திய அரசு மற்றும் பிரதிநிதிகள் குழு எழுப்பிய கவலைகளுக்கு நிரந்தர தீர்வை அளிப்பதாக உறுதியளித்தோம்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.