தமிழ்நாடு பட்ஜெட் 2024- 25: புதிய அறிவிப்புகள் - முக்கிய அம்சங்கள்
02:09 PM Feb 19, 2024 IST | Web Editor
Advertisement
2024- 25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள் மற்றும் அதன் அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்...
Advertisement
சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் அறிவிப்புகளை வெளியிட்டார். தாக்கல் செய்யப்பட்ட புதிய அறிவிப்புகள் மற்றும் அதன் முக்கிய அம்சங்களை காணலாம்.
புதிய அறிவிப்புகள் - அதன் அம்சங்கள்
- தமிழ்ப் புதல்வன் - ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு
அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்
- கலைஞரின் கனவு இல்லம் - ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு
2023-ம் ஆண்டிற்குள் வீடொன்றிற்கு ரூ.3.5 லட்சத்தில் 8 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்
- விருதுநகர் மற்றும் சேலம் - ரூ.2,483 கோடி நிதி ஒதுக்கீடு
மாவட்டங்களில் ஜவுளிப் பூங்காக்கள் அமைத்துத் தரப்படும்
- அடையாறு நதியை சீரமைக்கும் திட்டம் - ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு
- திண்டுக்கல், நாமக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் - ரூ.1,289 கோடி நிதி ஒதுக்கீடு
- கோயம்புத்தூரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா - ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கீடு
- வடசென்னை வளர்ச்சித் திட்டம் - ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு
பழங்குடியினர், வாழ்விடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்துதல்
- நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகள் - ரூ.960 கோடி நிதி ஒதுக்கீடு
- பிராட்வே பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் விரிவாக்கப் - ரூ.823 நிதி ஒதுக்கீடு
- சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே 27 தளங்களை கொண்ட நகர்ப்புரச் சதுக்கம் - ரூ.688 கோடி நிதி ஒதுக்கீடு
- ஊராட்சி ஒன்றிய ஏரிகள், குளங்களை சீரமைத்தல் - ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
- பூந்தமல்லியில் அதிநவீனத் திரைப்பட நகரம் - ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
- ஊரகப் பகுதிகளில் 2,000 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் - ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு
- நீலக் கொடி கடற்கரைகள் சான்றிதழ் பெற முக்கியமான கடற்கரைகளை மேம்படுத்துதல் - ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு
- கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு புதிய ஒன்றிணைந்த வளாகம் - ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு
- பொது நூலகங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு - ரூ.213 கோடி நிதி ஒதுக்கீடு
- கல்லூரிகளில் புதிய திறன் பயிற்சிக் கட்டமைப்புகள் - ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு