For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திடீரென அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல் - கொரோனாவின் உருமாறிய வைரஸால் ஏற்படும் பாதிப்பா?

04:29 PM Apr 29, 2024 IST | Web Editor
திடீரென அதிகரிக்கும் தொண்டை வலி  காய்ச்சல்   கொரோனாவின் உருமாறிய வைரஸால் ஏற்படும் பாதிப்பா
Advertisement

தொண்டை வலி,  இருமலுடன் காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில் பருவகால நோயாக மாறியதா கொரோனா என்று கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

நாட்டின் பல்வேறு மாநிலங்களில்,  மூச்சுவிடுவதில் சிரமம்,  இருமல்,  சளி,  தொண்டை வலியுடன் காய்ச்சலால் அவதிப்படுவோரின் எண்ணிக்கையும் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  குறிப்பாக இந்தப் பிரச்னை டெல்லி,  கொல்கத்தா,  மும்பை,  பெங்களூரு நகரங்களில் அதிகமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : பிரதமர் மோடி 6ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி மனு – டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி!

கொரோனாவுக்கு இருக்கும் அனைத்து அறிகுறிகளும் தற்போது பரவி வரும் காய்ச்சலுக்கும் இருப்பதால்,  இது கொரோனாவின் உருமாறிய வைரஸால் ஏற்படும் பாதிப்பா அல்லது கொரோனாவே பருவகால நோயாக மாறியிருக்கிறதா அல்லது வேறு ஏதேனும் வைரஸ் காரணமாக என்று பல தரப்பிலும் கேள்வி எழுந்துள்ளது.

ஆனால்,  நாட்டில் இதுவரை அபாய நிலைக்கு எதுவும் செல்லவில்லை என்றும்,  கொரோனா வைரஸ் பல கட்ட திரிபுகளை அடைந்து,  தற்போது ஒமைக்ரானின் துணைப் பிரிவுதான்  நாட்டில் பரவி வருவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. டெல்லியில் ஒரு சில மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் அவை அபாய நிலையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement