For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் | 500க்கும் மேற்பட்டோர் கைது!

01:59 PM Mar 08, 2024 IST | Web Editor
சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம்   500க்கும் மேற்பட்டோர் கைது
Advertisement

புதுச்சேரி சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட இந்தியா கூட்டணி கட்சியின் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியில்  கொலை செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் புதுச்சேரி முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.  அதன்படி இன்று காலை தொடங்கிய முழு அடைப்பு போராட்டத்திற்கு பெரும்பாலான வணிக நிறுவனங்கள்,  வியாபாரிகள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் புதுச்சேரி மாநிலம் வெறிச்சோடி காணப்படுகிறது.

முழு அடைப்புக்கு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் இரண்டு காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.  அதேபோன்று தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு இந்தியா கூட்டணி கட்சியினர் சார்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் இருந்து துணைநிலை ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநர் மாளிகை அருகே வந்த போது போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்த போலீஸார் தடுப்புகளை அமைத்திருந்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும்,  போலீஸாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புகளைத் தாண்டி உள்ளே செல்ல முயன்றதோடு,  தடுப்புகளையும் தள்ளி விட முயற்சித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது போலீஸார் சிலர்,  போராட்டக்காரர்கள் மீது தங்கள் கைகளில் இருந்த தடிகளால் தாக்கினர்.  இதனால் போராட்டக்காரர்களும் தங்கள் கைகளில் இருந்த கட்சிக் கொடிகளை போலீஸார் மீது வீசி தாக்குதல் நடத்தினர்.  இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிலர் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளைத் தாண்டி துணை நிலை ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயன்றனர்.  தடுப்புகளைத் தாண்டி உள்ளே சென்றவர்கள், ஆளுநர் மாளிகை வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.  இதையடுத்து புதுச்சேரி சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட இந்தியா கூட்டணி கட்சியின் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

Tags :
Advertisement