வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு, மண்டலமாக வலுப்பெற்றது!
வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
அந்தமான் அருகே உருவாகி, வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 3-ம் தேதி வாக்கில் புயலாகவும் வலுப்பெறும். 4-ம் தேதி அதிகாலை வடதமிழகம் – தெற்கு ஆந்திர கடலோரபகுதிகளில் நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து, இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 3 ஆம் தேதி 'மிக்ஜம்' புயலாக மாறும். மேலும் டிசம்பர் 4-ஆம் தேதி வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகக் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.