For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கைகள் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கவும், அவர்களுக்கு உதவவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
05:55 PM Sep 12, 2025 IST | Web Editor
நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கவும், அவர்களுக்கு உதவவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க  நடவடிக்கைகள்   முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
Advertisement

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,

Advertisement

”தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிந்திடவும். அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி அவர்களை மீட்டுவருவதற்கு, புதுதில்லி, தமிழ்நாடு இல்லத்தில் 24x7 கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை மற்றும் நேபாள நாட்டிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்டுவர புதுதில்லி, தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் செய்த தமிழ்நாட்டைச் சார்ந்த 116 நபர்கள் பத்திரமாக நேற்று (11.09.2025) இந்தியாவிற்கு திரும்பிவிட்டனர்.
மேலும், நேபாளத்தில் சிக்கித்தவித்து வரும் தமிழர்கள் தங்களது விவரங்களை தெரிவிக்கவும், நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது குடும்ப உறுப்பினர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்வதற்கும் புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 24x7 கட்டுப்பாட்டு அறை எண்களில் தொடர்பு கொள்ளலாம்.தொலைபேசி எண்: 011-24193300, கைபேசி : 9289516712 (whatsApp), மின்னஞ்சல் : tnhouse@tn.gov.in. prcofficetnh@gmail.com”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement