பாமக செயல் தலைவராக ஸ்ரீ காந்தி தேர்வு - ராமதாஸ் அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிலவி வருகிறது. இரு தரப்பினரும் வெவ்வேறு அணிகளாக செயல்படுகின்றனர்.
இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் தரப்பு பொதுக்குழுவை கூட்டி அன்புமணியின் செயல் தலைவர் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்தது. பதிலுக்கு ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அளிக்க கோரப்பட்டது. ஆனால் அன்புமணி பதிலளிக்காததால் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார்.
இந்நிலையில் தருமபுரியில் பாமக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் புதிய செயல் தலைவராக தனது மூத்த மகள் காந்திமதியை நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். மேலும் அவர், 'காந்திமதி கட்சியையும், எனக்கும் பாதுகாப்பாக இருப்பார்' என்று தெரிவித்தார்.