For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இலங்கை அதிபர் தேர்தல் | மகன் நமலை களமிறக்கிய மகிந்த ராஜபக்ச!

01:10 PM Aug 07, 2024 IST | Web Editor
இலங்கை அதிபர் தேர்தல்   மகன் நமலை களமிறக்கிய மகிந்த ராஜபக்ச
Advertisement

இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச போட்டியிடுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

Advertisement

2022 ஆம் ஆண்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவியில் இருந்து அகற்றிய மக்கள் எழுச்சிக்குப் பின்னர், இலங்கையில் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தல், கடுமையான போட்டியுடன் நான்கு முனைப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் சஜித் பிரேமதாச மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரை எதிர்கொள்வார்.

இலங்கையில் அடுத்த மாதம் 21ஆம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது. இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான 38 வயதான நமல் ராஜபக்ச போட்டியிடுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

முன்னதாக மகிந்தாவும், கோத்தபயவும் தேர்தலில் போட்டியிட விரும்பினாலும், கடந்த கால அனுபவங்களால் அவர்களுக்கு ஆதரவு கிடைக்காது என்பதால் நமல் ராஜபக்சவை களமிறக்க ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக மகிந்தாவும், கோத்தபயவும் தேர்தலில் போட்டியிட விரும்பினாலும், கடந்த கால அனுபவங்களால் அவர்களுக்கு ஆதரவு கிடைக்காது என்பதால் நமல் ராஜபக்சவை களமிறக்க ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

Tags :
Advertisement