For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆடு மேய்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக இருக்க கூடாதா? சீமான் பேச்சு!

ஆடு மேய்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக இருக்க கூடாதா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
07:21 AM Jul 11, 2025 IST | Web Editor
ஆடு மேய்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக இருக்க கூடாதா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆடு மேய்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக இருக்க கூடாதா  சீமான் பேச்சு
Advertisement

மதுரை மாவட்டம் விராதனூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆடு, மாடுகள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். மேடையின் முன்பு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட நாட்டின மாடுகள் மற்றும் ஆடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் எருமை மாடுகள், ஜல்லிக்கட்டு மாடுகள், செம்மறி கடா உள்ளிட்டவைகளை நிறுத்தி வைத்து சீமான் உரையாற்றினார். அப்போது மாநாடு தொடங்கியவுடன் ஆடு மாடுகள் மாநாடு தொடர்பாக 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

பின்னர் மேடையின் முன்பாக நின்ற ஜல்லிக்கட்டு காளைக்கு மாலை அணிவித்து சீமான் மரியாதை செலுத்தி மாநாட்டு உரையை தொடங்கினார். அப்போது பேசியவர், "நான் ஆடு மாடுகளின் உடைய எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் பேசுகிறேன். காட்டுக்குள் ஆடுமாடு நுழையக்கூடாது, மேய்ப்பர்கள் கால்வைக்க கூடாது என்றால் அதனை தகர்க்காமல் இருப்பது போன்ற கொடுமை உள்ளதா, மேய்ச்சல் நிலம் உரிமை என்ற முழக்கத்தோடு ஆடு மாநாடு நடத்தப்படுகிறது.

இந்தியாவில் தான் 24 ஆயிரம் கோடி மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்கிறார்கள். ரத்தத்தை உறுக்கி உங்களுக்கு பாலாக தருகிறோம், எங்களை நம்பி தாய்மார்கள் பிள்ளை பெறுகிறார்கள். உயிர்போகும் நிலையில் இறுதிப்பால் ஊற்றுவதும் நான் தான், இறுதி பால் கொடுக்கிற தாய் நம் முன்னாள் நிக்கிறார்கள். பாலில் பொருளாதார தற்சார்பு என பிரதமர் பேசுகிறார். 1 லட்சத்து 38 ஆயிரத்து 78 கோடி வருமானம் கிடைக்கின்றது.

50ஆயிரம் கோடிக்கு சாராயம் விற்று தாலி அருகிறார்கள். பொருளாதாரம் எங்கு உள்ளது என தெரியாத மூடர்களாக ஆட்சியாளர்கள் உள்ளனர். இங்கு ஆவின் பால் அரசு விற்கிறது, பால்வளத்துறை, கால்நடைத்துறை எதற்காக ஆடு மாடு இல்லாமல் பால் எப்படி மக்களிடம் விற்பார்கள். ஆனால் எங்களுக்கு சாப்பிட வைக்கோல் இல்லை மனிதர்களே! இது நான் பேசல முன்னாள் நிற்பவர்களின் மனக்குரலை எடுத்துவைக்கிறேன்.

1.2 லட்சம் மேய்ச்சல் நிலங்கள் தமிழகத்தில் உள்ளது. தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரியில் உள்ளதா சொல்கிறார்கள் ஆனால் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. மேய்ச்சல் நிலங்களை ஆக்கிரமித்து தொழிற்சாலைகள், வானூர்தி நலையங்கள் அமைக்கீறீர்கள். பால், தயிர், வெண்ணைய் வேண்டும் என கேட்போர்கள் என எங்களுக்கு உணவு இல்லை, நாங்கள் போஸ்டரையும், நெகிழியை திங்கும் நிலை உள்ளது.

2009 மேகமலை மலையடிவாரங்களில் காப்புகடுகள் வனவிலங்குகள் சரணாலயம், புலிகள் காப்பாகம் ஆடுமாடு மேய தடை என கூறி காடுகளை பறித்து கொண்டார்கள்.

சமவெளியில் மேய எங்கு இடம் உள்ளது. மலையில் சென்று நாங்கள் மேய்வதில் என்ன பிரச்சனை, நாங்கள் இன்று தான் மேய தொடங்குகிறோமோ. இப்போது மட்டும் எப்படி தடைபடுகிறது, தண்ணீர் சுனைகள் கலங்கடிக்கிறோம் என்கிறீர்கள், நாங்கள் நீச்சல் போட்டிக்கா செல்கிறோம், மேய்ச்சலுக்கு தடை ஏற்புடையதாக இல்லை.

வன விலங்குகளுக்கு நோய் பரப்புவோம் என்கிறார்கள், நாங்கள் எந்த நோயை பரப்பினோம், ஆற்றையும் அருவியையும் பாதுகாப்பவர்களா நீங்கள், வைகை நதி உருவாகுவதை தடுப்போம் என கூறி மேகமலையில் எங்களை அனுமதிக்க மறுக்கிறீர்கள். உங்களிடத்தில் கல்குவாரியாக உடைத்து பிரிக்கும் போது அப்போது வனவிலங்குகளை பற்றி கவலைப்படாத நீங்கள், தாயின்மார்பை கறியாக ஆக்கி சாப்பிட நினைக்கிறீர்கள்.

நாங்கள் மேய்வதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு வரும் என கூறுவது கேவலம், கேரளாவில் மலையை தொடவில்லை, ஆனால் அங்கு துறைமுகம் கட்ட கன்னியாகுமரியில் கற்களை உடைத்து எடுக்க அனுமதி கொடுத்தது யார? உங்களுடைய உணவுச்சங்கிலியை எப்படி மறந்தீர்கள், காடுகளுக்கும் புலி, சிங்கம், யானைக்கு தான் சொந்தமா எங்களுக்கு சொந்தம் இல்லையா?

காட்டில் இருந்த என்னை ஏன் வீட்டிற்கு கொண்டுவந்தீர்கள்? இதனை அறியாத கல்வி எதற்காக, படிக்காத எங்களுக்கு உள்ள அறிவு கூட உங்களுக்கு இல்லையா? எங்களை அர்ப்பமாக நினைக்கிறீர்கள், பள்ளி வகுப்பில் ஒழுங்காக படிக்காவிட்டால் ஆடுமாடு மேயுங்கள் என கூறுவது ஏன் அப்படி எங்களை பார்த்தால் இழிவாக உள்ளது.

ரசாயன உரத்திற்காக மாடுகளை கொல்ல நினைத்து கொன்றார்கள், பசுமைப்புரட்சி, வெண்மை புரட்சி என பேசுகிறீர்கள் நாங்கள் இல்லாத புரட்சி ஏது? ஆர்கானிக் புட் இயற்கை வேளாண்மை, எங்கள் சாணியும், புலுக்கையும் இல்லாத உரம் எது. மாட்டுக்கு தீவனம் இல்லாமல் ஒழிப்பதற்காக ரசாயன உரம் கொண்டு வந்தனர். உரம் என்னும் பெயரில் நச்சை கொட்டுகிறீர்கள்.

உழவர்குடி எங்கு போற்றப்படுகிறதோ உழவன் போற்றபடும் நாடு தான் நல்ல நாடு. ஆசிரியர்கள் போற்றப்பட வேண்டும், ஆசிரியர்களை போற்றும் நாடு அறிவார்ந்த நாடாக வளரும், தற்சார்பு பொருளாதரத்திலே முழுமையான பங்கு வேளாண்மை சார்ந்த கால்நடை வளர்த்தல் தான். வெளிநாடுகளில் சாலைகளில் இரு புறங்களிலும் மேய்ச்சல் நிலங்கள் இருக்கும்.

கால்நடைக்கு சிகிச்சை அளிப்பவர்கள் அரசு மருத்துவர்கள், ஆனால் ஆடு மேய்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக இருக்க கூடாதா? சாப்டுவேரில் வேலை செய்தாலும் சாப்டுதான் வேலை செய்ய வேண்டும், எங்கு பொருளாதாரம் இருக்கும் என தெரியாத அரசு. ஆடுமாடுகளுக்கு ஓட்டுரிமை தாருங்கள் நாங்கள் நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கிறோம் இது தான் எங்களின் கோரிக்கை.

நாங்கள் கருப்பாக இருப்பதால் உங்களுக்கு பிடிக்கவில்லை, பனையில் பால் போல வந்தால் பதறுகிறீர்கள். ஆனால் டாஸ்மாக்கில் தீர்த்தம்போல குடிக்கிறீர்கள். பாஜகவை நுழைய விடமாட்டோம் என இன்னும் நம்ப வைக்கிறார்கள், பாஜகவை காட்டி ஆண்டாண்டு காலமாக ஏமாற்றி வருகிறார்கள், அதிமுகவோடு கூட்டணியில் இருக்கும் கட்சிகளை போல பாஜகவும் ஒட்டியிருக்கிறது. ஆடுமாடு மேய்க்க தடை போட்டால் மேய்ச்சல் நிலங்களை உருவாக்க வேண்டும், தரிசு நிலத்தை மேய்ச்சல் நிலம் என சொல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement