Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நம்பிக்கை துரோகம் செய்து தான் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமா? நயினார் நாகேந்திரன்!

ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.100 சிலிண்டர் மானியமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் உள்ளது என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
12:58 PM Sep 07, 2025 IST | Web Editor
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.100 சிலிண்டர் மானியமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் உள்ளது என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த பதிவில், "அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே?

Advertisement

சமூகநீதியின் காவலர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொண்டு, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தெருவுக்குத் தெரு தங்களின் பிரச்சார பீரங்கிகளை இறக்கிவிட்ட ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.100 சிலிண்டர் மானியமாக வழங்கப்படும் என வாக்குறுதி எண் 503இல் தெரிவித்தது.

ஆனால், ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடந்தும் கிணற்றில் போட்ட கல்லாக அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் நிலுவையில் நிற்பதும், ஆட்சி முடியப்போகும் இறுதி மாதங்களிலும் ஆளும் அரசு அதை நிறைவேற்றப் போவதில்லை என்பதும் மக்களுக்கு நன்கு தெரியும். ஏழை மக்களை இப்படி ஏமாற்றி அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து தான் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமா?

அப்படியென்ன பதவி மோகம் அவர்களுக்கு? என்பது தான் அனைத்து தரப்பினரின் ஒரே ஆதங்கமாக தற்போது ஒலிக்கிறது. இப்படிப்பட்ட ஒரு மக்கள் விரோத கட்சிக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிப் பதவி கூட கிடைக்காது! பாதிக்கப்பட்ட பொதுஜனம் அதை ஒருபோதும் அனுமதிக்காது"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
betraying trustBJPDMKMKStalinNayinar NagendranTamilNadu
Advertisement
Next Article