அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு... 3 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவில் 2024ம் ஆண்டில் மட்டும் 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதையும் படியுங்கள் : “வழியெங்கும் திரண்டு வாரியணைத்துக் கொண்ட கடலூர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
அமெரிக்காவின் கெண்டகி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் ஓட்டுனர் உரிமம் பதிவு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வாகனம் நிறுத்தும் இடம் அருகே நேற்று மாலை சிலர் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த நபர் திடீரென அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி ஓடினார். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.