For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாலியல் வழக்கு - திருச்சி தனியார் பள்ளியில் +2 செய்முறை தேர்வுகள் ஒத்திவைப்பு!

01:50 PM Feb 07, 2025 IST | Web Editor
பாலியல் வழக்கு   திருச்சி தனியார் பள்ளியில்  2 செய்முறை தேர்வுகள் ஒத்திவைப்பு
Advertisement

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மணப்பாறைப்பட்டி சாலையில் உள்ள உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவியிடம், பள்ளி தாளாளரின் கணவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

நேற்று வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளர் சுதா, அவரது கணவர் வசந்த், நிர்வாகிகள் மாராச்சி, செழியன் உள்ளிட்ட நான்கு  4 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று பள்ளியின் முதல்வர் ஜெயலட்சுமி மணப்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தனியார் பள்ளியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணையால் இன்று நடைபெறவிருந்த +2 செய்முறை தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தனியார் சி.பி.எஸ்.சி பள்ளியில் ஆசிரியர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல், மாவட்ட கல்வி அலுவலர் பேபி ஆகியோர் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement