For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Tamirabarani -ல் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!

12:23 PM Oct 01, 2024 IST | Web Editor
 tamirabarani  ல் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
Advertisement

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisement

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாய தேவைக்குப் பயனளிக்கிறது. அத்துடன், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. நெல்லை மாநகராட்சி எல்லைக்குள் 17 கி.மீ தூரம் பயணிக்கும் தாமிரபரணி ஆற்றில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் நேரடியாகக் கலக்கிறது. தாமிரபரணி ஆற்று நீரில் கழிவுகள் கலப்பதால் குடிக்கும் தரத்தில் இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், தாமிரபரணி மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த காமராசு, 2018ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி ஆற்றின் கரையில் பழமையான மண்டபங்கள், படித்துறைகள் ஏராளமாக உள்ளன. இவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்குமாறும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், ஆற்றை தூய்மையாக பராமரிக்குமாறும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இதையும் படியுங்கள் : சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் #Maharashtra அரசு எடுத்த அதிரடி முடிவு! பசுக்களுக்கு “ராஜ மாதா” அந்தஸ்து

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.பொதுப்பணித்துறை தரப்பில், "தாமிரபரணி ஆற்றின் ஓரங்களில் மக்கள் வசிக்கும்
இடங்களில் பெரும்பாலும் கழிவுகள் கலக்கின்றன. ஆறுகளின் மாசு தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியமே நடவடிக்கை எடுக்கும். பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க இயலாது" என குறிப்பிடப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், "தாமிரபரணி ஆற்றுக்கு உரிமை கோரும் நெல்லை மாநகராட்சி
கடமைகளையும் பொறுப்பெடுத்து கொள்ள வேண்டும்" என தெரிவித்தனர்.

மேலும், வழக்கில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் மற்றும் நெல்லை,
தூத்துக்குடி மாவட்ட செயற்பொறியாளர்கள், சுற்றுச்சூழல் துறையின் நெல்லை,
தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்புப் பொறியாளர்களை தாமாக முன் வந்து
வழக்கில் இணைத்த நீதிபதிகள், உள்ளாட்சி அமைப்புகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் கழிவுநீர்
கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க உள்ளனர்? என்பது குறித்தும் அறிக்கை
தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags :
Advertisement