"சீமான் வாயை வாடகைக்கு விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" - செல்லூர் ராஜு விமர்சனம்!
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், ஆர்.ஜே தமிழ்மணி டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டையில் கருப்புக் கொடி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ,
"தமிழ்நாட்டில் இதுபோல துயரச் சம்பவம் நடந்தது இல்லை. வடநாட்டில் தான் நடந்ததுள்ளது. திமுக ஆட்சியில் தான் இதுபோல் விரும்பத்தக்காத சம்பவம் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்ட காவல்துறை உரிய பாதுகாப்பு தரவில்லை, தடுத்து நிறுத்தாதது திமுக அரசாங்கம் குறைபாடு. அதிக பரப்பளவில் அமைந்துள்ள இடங்களில் தவெக விஜய் பிரச்சாரம் செய்து இருக்கலாம்.
தவெக விஜய் தொகுதி வாரியாக கூட பிரச்சாரம் செய்து இருக்கலாம். தென்மாவட்டங்களில் விஜய் மாநாடு நடத்திய பின் பேருந்து பிரச்சாரம் செய்து இருக்கலாம். தவெக நிர்வாகிகள் முறைப்படி பேருந்து பயணத்தை நடத்திருக்க வேண்டும். இரண்டு பக்கமும் தவறு உள்ளது. சீமான் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார்.
அதிமுக சார்பில் சீமானுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். நாதக சீமான் வாயை வாடகைக்கு விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். விளம்பரம் தேடுவதற்காக சீமான் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.