சுட்டெரித்த வெயில் - கரூர் பரமத்தியில் 110.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு
இந்தியாவில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் கரூர் பரமத்தி நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
வழக்கமாக கோடைக் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தினந்தோறும் பல்வேறு இடங்களில் வெயில் சதமடித்து வருகிறது. இந்நிலையில் இம்மாதம் முழுவதும் வெப்ப அலை தொடரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்களின் பட்டியலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம், பரமத்தியில் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி நான்காவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள் :
நந்தியால் (ஆந்திரா) - 114.8 டிகிரி ஃபாரன்ஹீட்
போலங்கீர் (ஒடிசா) - 112.1 டிகிரி ஃபாரன்ஹீட்
நிசாமாபாத் (தெலங்கானா) - 112.1 டிகிரி ஃபாரன்ஹீட்
கரூர் பரமத்தி (தமிழ்நாடு) - 110.3 டிகிரி ஃபாரன்ஹீட்
டால்டோங்கஞ்ச் (ஜார்க்கண்ட்) - 110.12 டிகிரி ஃபாரன்ஹீட்