சுட்டெரிக்கும் கோடை வெயில் - குறைந்து வரும் முக்கிய ஏரிகளின் நீர்த் தேக்கங்கள்!
கோடை வெயில் சுட்டெரிப்பதால் சென்னையைச் சுற்றியுள்ள முக்கிய ஏரிகளில் நீர்வரத்து குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
கோடை உயர்ந்துள்ளதால் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கங்களில் வேகமாக நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதன்படி சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக திகழும் நீர்த்தேக்கங்களின் நீர் கையிருப்பு விவரங்கள் பின்வருமாறு
புழல் ஏரி : (87%)
மொத்த உயரம் 21.20 அடி நீர்
இருப்பு 19. 44 அடி
மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி
இருப்பு கொள்ளளவு 2900 மில்லியன் கன அடி
நீர்வரத்து வினாடிக்கு 595 கன அடி
நீர் வெளியேற்றம்: வினாடிக்கு 216 கன அடி.
சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 186 கன அடி
வெயிலுக்கு ஆவியாதல் மூலம் வினாடிக்கு 30 கன அடி வீணாகிறது
சோழவரம் ஏரி(13%)
மொத்த உயரம் 18.86 அடி உயரம் நீர் இருப்பு 3.43 அடி
மொத்த கொள்ளளவு 1.081 மில்லியன் கன அடி
இருப்பு கொள்ளளவு 0.145 மில்லியன் கன அடி
நீர் வரத்து இல்லை
நீர் வெளியேற்றம் 208 கன அடி
வெயிலுக்கு ஆவியாதல் மூலம் வினாடிக்கு 8 கன அடி வீணாகிறது.
பூண்டி அணை(32%)
மொத்த உயரம் 35 அடி உயரம்
நீர் இருப்பு 26.50 அடி
மொத்த கொள்ளளவு 3.231 மில்லியன் கன அடி
இருப்பு கொள்ளளவு 1.063 மில்லியன் கன அடி
நீர் வரத்து இல்லை
நீர் வெளியேற்றம் வினாடிக்கு 523 கன அடி
லிங்க் கால்வாயில் புழல் ஏரிக்கு வினாடிக்கு 485 கன அடி செல்கிறது
வெயிலுக்கு ஆவியாதல் மூலம் 25 கன அடி வீணாகிறது.
செம்பரம்பாக்கம் ஏரி(65.8%)
மொத்த உயரம் 24 அடி.
நீர் இருப்பு 19.16 அடி.
மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி
இருப்பு கொள்ளளவு 2401 மில்லியன் கன அடி
நீர் வரத்து இல்லை
நீர் வெளியேற்றம் 155 கன அடி
சென்னை குடிநீருக்காக 109 கன அடி வினாடிக்கு நீரேற்று நிலையம் மூலம் செல்கிறது
விவசாயத்திற்கு வினாடிக்கு 6 கனஅடி செலவாகிறது
வெயிலுக்கு ஆவியாதல் மூலம் வினாடிக்கு 40 கன அடி வீணாகிறது.
கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை அணை (73.8%)
மொத்த உயரம் 36.61 அடி உயரம்
நீர் இருப்பு 33.14 அடி
மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கன அடி.
இருப்பு கொள்ளளவு 388 மில்லியன் கன அடி
நீர் வரத்து இல்லை
நீர் வெளியேற்றம் 25 கன அடி
விவசாயத்திற்கு 10 கன அடி
வெயிலுக்கு ஆவியாதல் மூலம் 10 கன அடி வீணாகிறது