For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தார் சரத்குமார்!

01:35 PM Mar 12, 2024 IST | Jeni
பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தார் சரத்குமார்
Advertisement

சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்துள்ளார்.

Advertisement

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  கூட்டணி பேச்சுவார்த்தை,  தொகுதி பங்கீடு,  கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு,  நேர்காணல் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டிலும் அரசியல் கட்சிகள் மக்களவை தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.

அந்த வகையில்,  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாஜவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டது.  மேலும் இன்று மாநில,  மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த கூட்டத்திற்கு பின்னர் எந்தெந்த தொகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடப் போகிறது என்ற அறிவிப்பு  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  சரத்குமார் தன்னுடைய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் சரத்குமாரை,  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன்,  மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், சென்னை முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.  இந்த சந்திப்புக்கு பின்,  அனைவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக சரத்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும்,  எந்த கட்சியுடன் கூட்டணி,  எந்த தொகுதியில் போட்டி என்ற கேள்வி எழுகிறது.  இந்த முறை,  வலிமையான மோடிஜியுடன் சேர்ந்து செயல்பட்டால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.  அந்த நேரத்தில் என் மனைவியை எழுப்பி இதுகுறித்து தெரிவித்தேன்.  நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் உடன் இருப்பேன் என்று அவர் சொன்னார்.

இதையும் படியுங்கள் : மாநில திட்டக்குழு தயாரித்த 11 ஆய்வறிக்கைகள் முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு!

தலைவன் எவ்வழியோ, அ வ்வழியே நாங்கள் என்று பயணிக்கும் தொண்டர்கள், என்னைத் தாண்டி,  என் கருத்தைத் தாண்டி எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.  இது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல. இது ஒரு எழுச்சியின் தொடக்கம்.  பெருந்தலைவர் ஆட்சி போல் ஒரு ஆட்சி வராதா என்று நினைக்கும் பொழுது, இப்படி ஒரு ஆட்சியை மோடி கொடுக்கிறார் என்றால்,  நம் சக்தியை பாஜகவுடன் இணைத்து செயல்பட்டால் என்ன என்ற எண்ணத்தில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை இணைக்கிறேன். 2 026 தேர்தலை சந்திக்கும்போது பாஜக வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement