For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தனுக்கு மாரடைப்பு - தொடர்ந்து தீவிர சிகிச்சை!

06:53 AM Feb 28, 2024 IST | Web Editor
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தனுக்கு மாரடைப்பு   தொடர்ந்து தீவிர சிகிச்சை
Advertisement

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனுக்கு, மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-இல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர், அவர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இலங்கை தமிழரான சாந்தனுக்கு கடந்த ஜன.24-ஆம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

இதனிடையே கடந்த பிப். 23-ம் தேதி இலங்கையைச் சேர்ந்த சாந்தனை அந்நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதம் வழங்கியது. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மத்திய அரசு அனுமதியை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சாந்தனுக்கு அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சாந்தன் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement