59வது பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய சல்மான் கான்!
சல்மான் கான் தனது பிறந்த நாளை 4 அடுக்கு கேக் வெட்டி பிரம்மாண்டமாக கொண்டாடினார்.
நடிகர் சல்மான் கான், அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் தனது பிறந்தநாள் விழாவை பிரமாண்டமாக கொண்டாடினர். இது குறித்து இன்ஸ்டாகிராமில், சல்மானின் மைத்துனரும் நடிகருமான அதுல் அக்னிஹோத்ரி பாஷின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதுல் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மேஜையில் பிரமாண்டமான கேக் வைக்கப்பட்டிருந்தது. சல்மான் தனது பிறந்தநாளை தனது மருமகளான அயத்துடன் பகிர்ந்து கொண்டார். தனது பிறந்த நாளன்று அவர் கருப்பு சட்டையும் அவரது மருமகளான அயத் தங்கம் மற்றும் கருப்பு நிற உடையை அணிந்திருந்தனர். பின்னர் சல்மான் தனது மருமகள் ஆயத்துடன் நான்கு அடுக்கு கேக்கை வெட்டுகிறார். கேக்கினை வெட்டும் போது அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் கைதட்டி பிறந்தநாள் பாடலைப் பாடினர்.
இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சல்மான் கானின் தாயார், சித்தி ஹெலன், சகோதரர் சோஹைல் கான், சகோதரிகள் அர்பிதா மற்றும் அல்விரா, மைத்துனர் ஆயுஷ் சர்மா, நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் அவரது மனைவி ஜெனிலியா டிசோசா ஆகியோர் கலந்து கொண்டனர். முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியும் சல்மானுக்காக கைதட்டி பாடிக் கொண்டிருந்தனர். அவர் கேக் வெட்டியபோது, பின்னணியில் பட்டாசு வெடித்தது. சல்மான் தனது 59வது பிறந்தநாளில் சமூக வலைதளங்களில் இருந்து பல வாழ்த்துக்களை பெற்றார். இந்த கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகை படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் வெளிவந்துள்ளது.