For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

லேப்டாப்களை வாடகைக்கு எடுத்து விலைக்கு விற்று ரூ.3.50 கோடி மோசடி- சென்னையில் இளைஞர் கைது!

01:56 PM Nov 18, 2023 IST | Web Editor
லேப்டாப்களை வாடகைக்கு எடுத்து விலைக்கு விற்று ரூ 3 50 கோடி மோசடி  சென்னையில் இளைஞர் கைது
Advertisement

சென்னையில் லேட்டாப்புகளை வாடகைக்குப் பெற்று ரூ.3.50 கோடி மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

சென்னை விருகம்பாக்கம் அபுசாலி தெருவை சேர்ந்தவர் பிரேமலதா.  இவர் டீச்லீஃப் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.

இதே போல் பல்லாவரம் பம்மல் ஷங்கர் நகரை சேர்ந்த 27 வயதான தினேஷ் என்பவரும்
மடிக்கணினி வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.  இந்த நிலையில் கடந்த
இரண்டு மாதங்களுக்கு முன்பு தினேஷ் பிரேமலதாவிடம் சென்று தான் அனகாபுத்தூரில் கடை வைத்துள்ளதாகவும்,  20 மடிக்கணினிகள்  வாடகைக்கு வேண்டும் எனவும்  கேட்டுள்ளார்.

அதன்பேரில் தினேஷ் ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக செலுத்தி  20
மடிக்கணினிகளை மாத வாடகைக்கு எடுத்து சென்று தவறாமல் மாத வாடகையை செலுத்தி வந்துள்ளார்.  இந்த நிலையில் தினேஷ் மீண்டும் பிரேமலதாவிடம் சென்று தனக்கு பெரிய ஆர்டர் ஒன்று வந்துள்ளதாகவும்,  அதற்கு 520 மடிக்கணினிகள்  வாடகைக்கு வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.  அதற்கு பிரேமலதா 520 மடிக்கணினிகளுக்கு மாத வாடகை 27 லட்ச ரூபாய் ஆகும் என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: மின்சாரமின்றி இருளில் மூழ்கிய காஸா மருத்துவமனைகள்: 2 நாட்களில் 24 பேர் உயிரிழந்த அவலம்!

அதனை ஒப்புக் கொண்ட தினேஷ்,  பிரேமலதாவிடம் இருந்து ரூ.3.50 கோடி மதிப்புள்ள 521 மடிக்கணினிகளை வாடகைக்கு எடுத்துச் சென்றார்.  முதல் மாதம் வாடகை கொடுத்த நிலையில் அடுத்த மாதம் அவரிடமிருந்து வாடகை வரவில்லை.  இதற்கிடையே பிரேமலதாவிடம் அவரது வாடிக்கையாளர் ஒருவர் சென்று குறைந்த விலையில் அனகாபுத்தூரில் ஒருவர் மடிக்கணினிகளை விற்பனை செய்து வருவதாகவும் தங்களுக்கு தேவைப்பட்டால் சென்று வாங்கி கொள்ளுமாறு முகவரி கொடுத்துள்ளார்.

மேலும் அந்த வாடிக்கையாளர்கள் தன் வாங்கி வந்த மடிக்கணினிகளை பிரேமலதாவிடம் காண்பித்துள்ளார்.  அதனைப் பார்த்த பிரேமலதா அது தன்னிடமிருந்து வாடகைக்கு எடுத்து செல்லப்பட்ட  மடிக்கணினிகள்  என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.  பின்னர் இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷை கைது செய்தனர்.

Tags :
Advertisement