"தண்ணீரை வீணடித்தால் ரூ.2000 அபராதம்" - டெல்லி அரசு அதிரடி!
டெல்லியில் நிலவி வரும் கடும் குடிநீர் பஞ்சம் காரணமாக குடிநீரை வீணாக்கினால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
ஹரியாணா மாநிலத்தில் இருந்து டெல்லி மாநிலம் வழியாக ஓடும் யமுனை நதியிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லி பகுதியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவு வருகிறது. ஹரியாணாவில் ஆளும் பாஜக அரசு, டெல்லி மாநிலத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை குறைத்து விட்டதே இதற்கான காரணம் என ஆளும் ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.
கார் கழுவுதல், வீடுகளில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடுதல், போன்றவற்றிற்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடுமையான குடிநீர் கொஞ்சம் ஏற்பட்டு, இதே போன்ற அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.