Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு!

10:56 AM Feb 19, 2024 IST | Web Editor
Advertisement

சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். 

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது. 

தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். அவரை சந்தித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, காட்சிக்கு எளியன் என்ற திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை கூறி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் உரையை துவங்கினார். 

அந்த உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது,

“100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் தமிழர்களின் வாழ்வை உயர்த்தியது. நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு ஒரு ஆண்டில் 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது இந்த பேரவையில் தான். மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது.

சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட காப்பிய நூல்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழி பெயர்க்க 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் இலவச மின்சாரத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொழித் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கீழடி, வெம்பக்கோட்டை, கீழமண்டி மற்றும் மேலும் 8 இடங்களில் தொல்லியல் ஆய்வு செய்ய ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ் இணைய மின் கல்வி நிலையங்களுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் 2030க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். 2000 கி.மீ. அளவில் புதிதாக சாலை அமைப்பதற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
#MMKADMKBJPBudgetBudget 2024CongresscpicpimDMKedappadi palaniswamiEPSKMDKMDMKMK StalinNews7Tamilnews7TamilUpdatesPMKTamilnadu budgetTAMILNADU BUDGET 2024Thangam thennarasuTN Assembly 2024tvkVCK
Advertisement
Next Article