வணிக வளாகத்தின் மேற்கூரை இடிந்து விபத்து - 6 பேர் உயிரிழப்பு!
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பெரு. இந்த நாட்டின் லா லிபரேட்டட் மாகாணத்தில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த வணிக வளாகத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. அக்கம் பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் ஜேசிபி உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் : “ஒரு போதும் மும்மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 78 பேர் படுகாயமடைந்தனர். மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த திடீர் விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வணிக வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.