For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#RingOfFire | நடப்பாண்டின் கடைசி சூரிய கிரகணம்! தென் அமெரிக்க மக்கள் கண்டு களித்தனர்!

03:33 PM Oct 03, 2024 IST | Web Editor
 ringoffire   நடப்பாண்டின் கடைசி சூரிய கிரகணம்  தென் அமெரிக்க மக்கள் கண்டு களித்தனர்
Advertisement

நடப்பாண்டின் கடைசி சூரிய கிரகணம் தென் அமெரிக்க நாடுகளில் தெரிந்தது. ‘ரிங் ஆஃப் ஃபயர்’ எனப்படும் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பசிபிக் பெருங்கடல், தெற்கு சிலி, தெற்கு அர்ஜென்டினா உள்ளிட்ட பகுதிகளில் இருந்த மக்கள் கண்டு ரசித்தனர்.

Advertisement

இந்திய நேரப்படி நேற்று இரவு 9.13 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.15 மணி வரை இந்த அதிசய நிகழ்வு நடந்தது. சந்திரன் நேரடியாக சூரியனுக்கு முன்னாள் செல்லும் போது சூரிய கிரகணம் தோன்றுகிறது. இந்நிலையில் நேற்றிரவு நடந்த இந்த குறிப்பிட்ட சூரிய கிரகணம் "நெருப்பு வளையம்" என்று அழைக்கப்படுவதற்கு ஒரு காரணம் உள்ளது. ஏனெனில் சூரியனின் மேற்பரப்பை முழுவதுமாக நிலவால் மறைக்க முடியாது என்பதால் வானில் நெருப்பு வளையம் போன்று தோன்றுகிறது.

இந்தவகை சூரிய கிரகரணத்தை வெறும் கண்களால் பார்த்தால் விழித்திரை பாதிக்கப்படும். இதனால் பசிபிக் பெருங்கடல், தெற்கு சிலி, தெற்கு அர்ஜென்டினா உள்ளிட்ட பகுதிகளில் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தியா, ஆசியாவில் இந்த கிரகணத்தைப் பார்க்க இயலாது ஏற்கனவே வானியல் ஆய்வாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு வருடமும் 2 முதல் 4 சூரிய கிரகணங்கள் நிகழ்வது வழக்கம். ஆனால் இது போன்ற நெருப்பு வளைய சூரிய கிரகணம் உலகின் சிலப் பகுதிகளில் மட்டுமே தெரியும். இதனால் நேற்றிரவு நிகழ்ந்த சூரிய கிரகணம் அண்டார்டிகா, ஹவாய், மெக்சிகோ , நியூசிலாந்து, பிரேசில் மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் பகுதியளவு கிரகணமாக மட்டும் தெரிந்தது.

அடுத்த சூரிய கிரகணம் எப்போது?

இந்நிலையில், இந்த ஆண்டு வானத்தில் கண்ணை கவரும் வகையில் நிகழ்ந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை போன்றே அடுத்த ஆண்டு இரண்டு சூரிய கிரகணத்தைக் காணலாம் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, 2025-ஆம் ஆண்டு மார்ச் 29 அன்று நிகழும் சூரிய கிரகணம், ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் தெரியும். இரண்டாவது, சூரிய கிரகணம் செப்டம்பர் 21 அன்று ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் காண முடியும் எனக் கூறப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக ஒரு வருடம் கழித்து, 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 17, அன்று முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement