For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஜம்மு காஷ்மீர் மக்களின் தீர்ப்பை பாஜக ஏற்றுக் கொள்ள வேண்டும்..." - தேர்தல் முடிவு குறித்து #OmarAbdullah பேட்டி!

12:46 PM Oct 08, 2024 IST | Web Editor
 ஜம்மு காஷ்மீர் மக்களின் தீர்ப்பை பாஜக ஏற்றுக் கொள்ள வேண்டும்       தேர்தல் முடிவு குறித்து  omarabdullah பேட்டி
Advertisement

ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பாஜக ஏற்றுக் கொள்ள வேண்டும் என தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.

Advertisement

90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமாக 63.88 சதவீத வாக்கு கள் பதிவாகின. ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெற்றுள்ளது. மேலும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது என்பதால் இத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.இங்கு தேசிய மாநாடு கட்சியும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில், பாஜகவும், மக்கள் ஜனநாயக கட்சியும் முக்கிய போட்டியாளர்களாக உள்ளன.

இந்நிலையில், 20 மையங்களில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி (இந்தியா கூட்டணி) முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா போட்டியிட்ட புத்காம் மற்றும் கந்தர்பால் ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள் : குழந்தைகளுக்கு தடை செய்யப்பட்ட #Nimesulide மருந்து… கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; மருந்து கட்டுப்பாட்டு துறை எச்சரிக்கை!

இந்நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது :

" ஜம்மு –காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனை பாஜக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக அவர்கள் எந்த தந்திரத்தையும் செய்யக்கூடாது" என தெரிவித்தார்.

Tags :
Advertisement