"வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்" - செல்வப்பெருந்தகை ஆதரவு!
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது மசோதாவை மத்திய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
அதை தொடர்ந்து, சட்டப்பேரவை கட்சிகளின் உறுப்பினர்கள் தீர்மானத்தின் மீதான தங்களின் நிலைபாட்டை தெரிவித்து, பின்னர் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "சிறுபான்மையின மக்களான இஸ்லாமியர்களின் நலனுக்கு எதிராக மத்திய பாஜக அரசு வக்ஃப் வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இது குறித்து பலவிதமான போராட்டம், பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு இந்த சட்டத்திருத்திற்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்துவந்துள்ளோம்.
சிறுபான்மையின மக்களான இஸ்லாமியர்களின் நலனுக்கு எதிராக ஒன்றிய பா.ஜ.க.அரசு வக்ஃப் வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இது குறித்து பலவிதமான போராட்டம், பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு இந்த சட்டத்திருத்திற்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்துவந்துள்ளோம்.
இன்று தமிழ்நாடு…
— Selvaperunthagai K (@SPK_TNCC) March 27, 2025
இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வக்ஃப் வாரிய சட்டத்திருத்திற்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வந்து, அது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.